குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது


குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 1:35 AM IST (Updated: 4 April 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குடும்ப தகராறில் பெண்ணை கொன்ற அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்த் உரவ் (வயது 40). இவரது மனைவி சஞ்சி (36). இவர்கள் 2 பேரும் கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள். பெங்களூரு விதானசவுதா அருகே உள்ள ஒரு ஓட்டல் வளாகத்தில் சிறிய ஷெட்டில் தம்பதி தங்கி இருந்து, அங்கு நடந்து வரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தம்பதி இடையே வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சந்த் உரவ் தனது மனைவி சஞ்சியை அடித்து, உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த சஞ்சி பரிதாபமாக இறந்து விட்டார்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் விதானசவுதா போலீசார் விரைந்து வந்து சஞ்சி உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் சஞ்சியை சந்த் உரவ் அடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்த் உரவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story