தொழிலாளியிடம் திருடிய 2 பேர் கைது


தொழிலாளியிடம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 1:53 AM IST (Updated: 4 April 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெரியார் பஸ் நிலையத்தில் தொழிலாளியிடம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 38). தொழிலாளி. சம்பவத்தன்று இவர், பெரியார் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய ‘பர்சை’ அலங்காநல்லூரை சேர்ந்த உதயசெல்வம் (38), மணிமாலா (42) ஆகியோர் திருடி உள்ளனர். இதுகுறித்து சிவசக்தி திடீர் நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து பர்சை மீட்டனர்.


Next Story