ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்வு


ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்வு
x
தினத்தந்தி 4 April 2022 2:13 AM IST (Updated: 4 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு
ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. 
விலை உயர்வு
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 100-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. தாளவாடி, அந்தியூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தக்காளிகள் வரத்தாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை குறைந்து விற்பனை ஆனது. இந்த நிலையில் தற்போது காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் ஈரோடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்துள்ளது.
தக்காளி வரத்து குறைந்தது
குறிப்பாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தற்போது தக்காளி வரத்து குறைந்து வெறும் 350 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.16 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பீன்ஸ் -ரூ.70, பீட்ரூட் -ரூ.50, கேரட் -ரூ.80, கத்தரிக்காய் -ரூ.20, வெண்டைக்காய் - ரூ.40, பீர்க்கங்காய்- ரூ.35, பாகற்காய் -ரூ.25, முள்ளங்கி -ரூ.25, முருங்கைக்காய் -ரூ.50, அவரைக்காய் -ரூ.60, மிளகாய் -ரூ.50, இஞ்சி -ரூ.50, முட்டைகோஸ் - ரூ.20, சின்ன வெங்காயம் - ரூ.25, பெரிய வெங்காயம் -ரூ.20.

Next Story