வீடுபுகுந்து கொள்ளையடித்த இலங்கை அகதி கைது; 61 பவுன் மீட்பு
திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 61 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. இவர் தனியார் வங்கி சுவரை உடைத்து திருட முயன்றவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
திருமங்கலம்,
திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த இலங்கை அகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 61 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. இவர் தனியார் வங்கி சுவரை உடைத்து திருட முயன்றவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
நகை பறித்த ஆசாமி
மதுரை மாவட்டம் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே குராயூரைச்சேர்ந்த மகாராஜன் மனைவி சந்திரா (வயது 46). வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வருகிறார். வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்த இவரிடம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் சந்திராவின் காதில் அணிந்திருந்த தங்க தோடை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். சந்திரா திருடன், திருடன் என சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் வாலிபரை விரட்டி பிடித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் கேதீஸ்வரன் என்ற சந்திரகுமார் (36) என்பது தெரியவந்தது. இவர் உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்.
61 பவுன் நகை மீட்பு
இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், திருமங்கலம் நகரில் உள்ள ஆசிரியை ஒருவர் வீட்டில் 50 பவுன் நகைகள், ராஜாராம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் திருமங்கலம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கியின் பின்புற சுவரை துளையிட்டு திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கேதீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 61 பவுன் நகைகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறும் போது, குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார்.
Related Tags :
Next Story