சந்திரதிரிகோண மலைப்பாதையில் 15 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த ஜீப்; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
சந்திரதிரிகோண மலைப்பாதையில் தறிகெட்டி ஓடி 15 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 11 பேர் உயிர் தப்பினர்.
சிக்கமகளூரு:
15 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது
சிக்கமகளூரு அருகே சந்திரதிரிகோணமலை உள்ளது. உகாதி பண்டிகையான நேற்றுமுன்தினம் சந்திரதிரிகோண மலைக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதேபோல் பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 11 பேர் சந்திர திருகோணமலைக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் ஜெரி அருவியை காண வாடகை ஜீப்பில் சந்திரதிரிகோண மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அத்திகுந்தி எனுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஜீப் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் ஜீப், 15 அடி ஆழ பள்ளத்திற்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
இதில் ஜீப் பலத்த சேதமடைந்தது. ஜீப்பில் இருந்த 11 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் பொக்லைன் வாகனத்தை வரவழைத்து பள்ளத்தில் பாய்ந்த ஜீப் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story