குமரியில் கஞ்சா-மது விற்ற 29 பேர் கைது


குமரியில் கஞ்சா-மது விற்ற 29 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 2:34 AM IST (Updated: 4 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் கஞ்சா-மது விற்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில், 
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசாரால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதே போல குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், கஞ்சா மற்றும் பதுக்கி வைத்து மது விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன் மூலம் கஞ்சா விற்றதாக 5 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பதுக்கி மது விற்றதாக 24 பேர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் மொத்தம் கஞ்சா மற்றும் மதுவிற்றதாக  29 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதவிர புகையிலை விற்றதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. லாட்டரி விற்றதாக 2 பேர் கைதானார்கள். அதோடு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story