குளச்சல் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு


குளச்சல்  துணை சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 April 2022 2:37 AM IST (Updated: 4 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல், 
குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்வாகி
குளச்சல் அருகே பாலப்பள்ளம் குன்னன்விளையை சேர்ந்தவர் ஜெயன் (வயது 39), மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக உள்ளார். இவர் கடந்த 29-ந் தேதி மாலை சேவிளை சந்திப்பில் உள்ள டீ கடை அருகில் செல்லும்போது அங்கு நின்ற அவரது உறவினரும், அ.தி.மு.க. பிரமுகருமான பிரின்ஸ்பாலுடன் தகராறு ஏற்பட்டு, இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதில் படுகாயம் அடைந்த பிரின்ஸ்பால் குளச்சல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து குளச்சல் போலீசார் ஜெயன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்தநிலையில் நேற்று காலை ஜெயன் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க போவதாக கையில் பெட்ரோல் பாட்டிலுடன் வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். 
பேச்சுவார்த்தை
இதனையறிந்த குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் விரைந்து சென்று வரும் வழியிலேயே ஜெயனை வெள்ளியாக்குளம் தெற்கு கரையில் மடக்கி பிடித்தார். அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. உடனே ஜெயன் தரையில் புரண்டு ‘எனக்கு நியாயம் வேண்டும்' என அழுதார். 
பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஜெயனை குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 
இச்சம்பவத்தால் வெள்ளியாகுளம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story