முதியவர் சாவில் மர்மம்; போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்


முதியவர் சாவில் மர்மம்; போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 4 April 2022 3:49 AM IST (Updated: 4 April 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் சாவில் மர்மம்; போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி:
கடலூர் மாவட்டம் ஆதினங்குடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 65). இவர் கடந்த 31-ந்தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 1-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் மாவட்டம் ஆதினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராஜமாணிக்கம் தாக்கப்பட்டதால் தான் இறந்ததாகவும், அவருடைய சாவில் மர்மம் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜமாணிக்கத்தின் உறவினர் மணிமாறன் உள்ளிட்டோர் கடலூர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மணிமாறன் மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திாியில் ராஜமாணிக்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கடலூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மணிமாறனும் இருந்ததால் அவரை கடலூர் போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் உறவினர்கள் தடுத்ததால், போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் மணிமாறன் மயங்கி விழுந்தார். உடனே அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடலூர் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story