மோசடியாக பணம் எடுத்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்


மோசடியாக பணம் எடுத்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 4 April 2022 3:50 AM IST (Updated: 4 April 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

மோசடியாக பணம் எடுத்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி:

வங்கி கணக்கில் மோசடி
பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து அவ்வப்போது இணையதளம் வழியாக மோசடியாக பணம் எடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில மோசடி கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க தாமதப்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்தநிலையில் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது:-
புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் பதற்றம் அடைய வேண்டாம். உடனடியாக (மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள்) சைபர் கிரைம் போலீசாருக்கு 1930-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் மூலம் எடுக்கப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story