மனைவி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி


மனைவி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி  கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 4 April 2022 4:29 PM IST (Updated: 4 April 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

மனைவி, குழந்தையை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வீரசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்றுவந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் எடுத்து வந்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் நின்று கொண்டு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிப்பதற்காக அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். இதையடுத்து நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி் விசாரித்தனர். அப்போது அவர், "எனக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மனைவியை டிரைவர் ஒருவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று விட்டார். அப்போது எனது மனைவி என்னுடைய 3 வயது மகனையும் அழைத்து சென்று விட்டார். அங்கு அந்த டிரைவர் எனது மகனுக்கு உடலில் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்துகிறார். எனது மனைவி, மகனை மீட்டுத்தரக்கோரி கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்கொலைக்கு முயன்றேன்" என்றார். பின்னர் அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story