திருமேனி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


திருமேனி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 5 April 2022 12:15 AM IST (Updated: 4 April 2022 6:32 PM IST)
t-max-icont-min-icon

திருமக்கோட்டை திருமேனி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திருமக்கோட்டை:-

திருமக்கோட்டை கிராமத்தில் உள்ள திருமேனி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து திருமேனி ஏரியை நில அளவை செய்து ஏரியின் எல்லையை நிர்ணயம் செய்யும் பணி நடந்தது. இதையடுத்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. தற்போது ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். ஏரியில் மீதமுள்ள எல்லை பகுதி விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தாசில்தார் கூறினார். 

Next Story