மும்பையில் புதிதாக தொடங்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு
புதிதாக தொடங்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மும்பை,
புதிதாக தொடங்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திடீரென நின்ற ரெயில்
மும்பையில் காட்கோபர்- வெர்சோவா இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆரே- தகிசர், தகிசர்- தானுகர்வாடி இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
இதில் காலை ஆரே நோக்கி வந்து கொண்டு இருந்த மெட்ரோ ரெயில் ஒன்று திடீரென மகாதானே ரெயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றது. பயணிகள் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் ரெயிலிலேயே இருந்தனர்.
பயணிகள் அவதி
இந்தநிலையில் அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி மாற்று போக்குவரத்து மூலம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். தொடங்கிய 3-வது நாளிலேயே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
முன்னதாக புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட சில மெட்ரோ ரெயில்கள் சுத்தம் செய்யப்படாமல் மிகவும் அழுக்காகவும், தூசியுடனும் பயணிகள் முகசுளிக்கும் வகையில் இருந்தது.
------------------
Related Tags :
Next Story