மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் தொழிலாளி சாவு


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்  தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 4 April 2022 7:22 PM IST (Updated: 4 April 2022 7:28 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகிலுள்ள சில்வார்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்(35), சண்முகம்(41) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தேவதானப்பட்டிக்கு பெயிண்டு வாங்க வந்து கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின்ரோடு பைபாஸ் அருகே வந்தபோது தேனியில் இருந்து பழனிக்கு சென்ற கார் மோட்டார்சைக்கிளின் பின்னால் மோதியது. 
இதில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ், சண்முகம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story