நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x
தினத்தந்தி 4 April 2022 7:49 PM IST (Updated: 4 April 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

பந்தலூர்-

கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு அய்யன்கொல்லியில் இருந்து பந்தலூர் வழியாக கூடலூருக்கு அரசு பஸ் சென்றது. 

பந்தலூரை அடைந்ததும் திடீரென பழுதடைந்து நடுவழியில் பஸ் நின்றது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் அவதி அடைந்தனர். எனவே பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story