இரட்டைக்கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது


இரட்டைக்கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 8:24 PM IST (Updated: 4 April 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே இரட்டைக்கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). நிதிநிறுவன அதிபரான இவரும், அவரது தாய் சவுந்தரமும் (70) கடந்த 30-ந்தேதி நள்ளிரவில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் செல்வராஜின் மனைவியே தனது கள்ளக்காதலனை ஏவி கணவரையும், மாமியாரையும் கொலை செய்தது தெரியவந்தது.
 இதையடுத்து செல்வராஜ் மனைவி சுபஹாசினி (29), அவரது கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணன் (29), இவரது கூட்டாளியான செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) மற்றும் 2 பள்ளி மாணவர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த இரட்டைக்கொலை வழக்கில் திட்டம்போட்டு கொடுத்த வடமதுரையை சேர்ந்த அருண் (22) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் வடமதுரையில் பதுங்கியிருந்த அருணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story