இளம் அறிவியல் விருது பெற்ற மாணவனுக்கு கலெக்டர் பாராட்டு
தூத்துக்குடியில் இளம் அறிவியில் விருது பெற்ற மாணவனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இளம் அறிவியில் விருது பெற்ற மாணவனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டினார்.
பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் நேரில் சென்று மனுக்களை வாங்கினார். அப்போது, இளம் அறிவியல் விருது பெற்ற பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் ஷகில்இஷாஸ், பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி, வாகன ஓட்டுநர்களுக்கான முன்னெச்சரிக்கை கண்ணாடி, அட்வான்ஸ் சென்சார் பல்ப், ப்ளுடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர், மஸ்கிடோ கில்லர், பவர்பேங்க் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து பாராட்டு பெற்றார். மாணவனின் திறமையை பாராட்டிய மாவட்ட கலெக்டர் பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சியை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 5 எண்ணம் தயாரிக்க அறிவுறுத்தினார்.
பட்டுவளர்ப்பு
மேலும், பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் மாநில திட்டம் 2021-22-ம் ஆண்டு பட்டு வளர்ப்பு மேற்கொண்டு பட்டுக்கூடு அறுவடை செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயிகளான கோவில்பட்டி லட்சுமியம்மாள்புரத்தை சேர்ந்த கோ.செல்வராஜ் என்பவருக்கு ரூ.25 ஆயிரமும், கோவில்பட்டி லிங்கம் பட்டியை சேர்ந்த சிங்கராயர் என்பவருக்கு ரூ.20 ஆயிரமும், ஸ்ரீவைகுண்டம் உடையார் குளத்தை சேர்ந்த செ.ராஜாத்தி என்பவருக்கு ரூ.15 ஆயிரமும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story