தூத்துக்குடி அனல் மின்நிலை யத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீர் நிறுத்தம்


தூத்துக்குடி அனல் மின்நிலை யத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 April 2022 8:59 PM IST (Updated: 4 April 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திங்கட்கிழமை திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திங்கட்கிழமை திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.
அனல்மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. சமீபகாலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுவீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நிறுத்தம்
இந்த நிலையில் நேற்று 3, 4-வது மின் உற்பத்தி எந்திரங்கள் திடீரென நிறுத்தப்பட்டன. 1, 2, 5 ஆகிய மின் உற்பத்தி எந்திரங்களில் மட்டும் மின்சாரம் உற்பத்தி நடந்தது. அதே நேரத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது தொடர்பாக அனல்மின்நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமாரிடம் கேட்ட போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.


Next Story