எல்லை பாதுகாப்பு படை, நாட்டின் கவுரவத்தை அதிகரித்து உள்ளது; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு


எல்லை பாதுகாப்பு படை, நாட்டின் கவுரவத்தை அதிகரித்து உள்ளது; கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2022 8:59 PM IST (Updated: 4 April 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

எல்லை பாதுகாப்பு படை நாட்டின் கவுரவத்தை அதிகரித்து உள்ளது என்று கவர்னர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.

பெங்களூரு:

நாட்டின் கவுரவம்

  பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படையின் உதவி பயிற்சி மையம் உள்ளது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி முடிந்து விடைபெற்று செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு, அந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

  இந்திய எல்லை பாதுகாப்பு படை, நாட்டின் முதல் பாதுகாப்பு படை மற்றும் உலகின் பெரிய எல்லை காவல் படை ஆகும். இது கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இது நாட்டின் கவுரவத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் கார்கில் போரில் எல்லை பாதுகாப்பு படை சிறப்பாக செயல்பட்டது. எல்லையில் நிலவும் சவால்களை எதிர்கொண்டு பணியாற்றும் வீரர்களின் திறன் முக்கியமானது.

பெற்றோருக்கு நன்றி

  உங்களின் தைரியம் மற்றும் திறனால் நாடு பாதுகாப்பாக உள்ளது. இந்த பயிற்சி மையம் சிறப்பான முறையில் பயிற்சி வழங்குகிறது. தேசபக்தி, தைரியம், சாகசம் மற்றும் திறமையை வளர்க்கிறது. நாட்டின் சேவைக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் தங்களின் பிள்ளைகளை நாட்டின் சேவைக்கு அனுப்ப வேண்டும்.
  இவ்வாறு தாவர்சந்த் கெலாட் பேசினார்.

  இந்த விழாவில் எல்லை பாதுகாப்பு படை ஜெனரல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மஞ்சூரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story