அரிசி கடத்தலுக்கு துணையாக இருந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம்
அரிசி கடத்தலுக்கு துணையாக இருந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தேனி:
தேனி வாரச்சந்தை எதிரே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் உள்ளது. இங்குள்ள ரேஷன் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசியை சிலர் கடத்திச் செல்வதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அங்குள்ள ரேஷன் கடை எண் 5-ல் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது கடையில் பொருட்கள் இருப்பு விவரங்கள் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு அவர் துணை போனதாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் அமராவதி என்பவரை பணி இடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். மேலும் அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக தணிக்கை மற்றும் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story