உரம் தயாரிக்கும் மையத்தில் மேயர் திடீர் ஆய்வு


உரம் தயாரிக்கும் மையத்தில் மேயர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 April 2022 9:56 PM IST (Updated: 4 April 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அண்ணாநகரில் உள்ள உரம் தயாரிக்கும் மையத்தில் மேயர் இளமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட 14-வது வார்டு கவுன்சிலர் தனபாலன், திண்டுக்கல் அண்ணா நகரில் செயல்படும் உரம் தயாரிக்கும் மையத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் புகார் தெரிவிப்பதாக கூறினார்.
இதன் எதிெராலியாக உரம் தயாரிக்கும் மையத்தில் மேயர் இளமதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரம் தயாரிப்பு மையத்தின் செயல்முறைகள் குறித்து சுகாதார ஆய்வாளர் லாவண்யாவிடம் கேட்டறிந்தார். பின்னர் காய்கறி, பழக்கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற பயன்படுத்தப்படும் தொட்டிகள், அவற்றை கூழாக மாற்ற உதவும் எந்திரம் செயல்படும் விதம் ஆகியவற்றையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மேற்பார்வையாளர் மனோஜ் குமார், தூய்மை பாரத இயக்கத்தின் பரப்புரையாளர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் இருந்து சவுந்தரராஜா மில் அலுவலகம் வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்து இருவழிப்பாதையாக மாற்ற ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சேகர், வெங்கடேஷ், உதவி பொறியாளர் நவநீத கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story