வெள்ளரி பிஞ்சு அறுவடை பணி தீவிரம்


வெள்ளரி பிஞ்சு அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 April 2022 10:25 PM IST (Updated: 4 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர்-சிங்கனோடை பகுதிகளில் வெள்ளரி பிஞ்சு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

திருக்கடையூர்
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் மற்றும் மின்மோட்டார் மூலமாக குளம், வாய்க்கால்களில் உள்ள நீர் பாய்ச்சி திருக்கடையூர்-சிங்கனோடை பகுதிகளில் சுமார் 10 ஏக்கரில் வெள்ளரி பிஞ்சு சாகுபடி செய்யப்பட்டது. நன்கு வளர்ந்த நிலையில் தற்போது வெள்ளரி பிஞ்சுகள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிங்கனோடையை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறுகையில், மேற்கண்ட பகுதிகளில் நாங்கள் ஆண்டுதோறும் வெள்ளரி பிஞ்சு சாகுபடி செய்கிறோம். இந்த பயிர் 40 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படுகிறது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
கோடை வெயில்
 இந்த வெள்ளரி பிஞ்சு கோடை வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க பெரிதும் பயன்படுகிறது. இதனால், வியாபாரிகள் வெள்ளரி பிஞ்சுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த ஆண்டு கோடை வெயில் அதிக அளவில் இருக்கும் என்பதால் வெள்ளரி பிஞ்சு பயிர் அதிக அளவில் பயிரிட்டிருந்தோம். ஒரு வெள்ளரி பிஞ்சு ரூ.3.50 லிருந்து பிஞ்சுக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

Next Story