ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும்


ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும்
x
தினத்தந்தி 4 April 2022 10:25 PM IST (Updated: 4 April 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மீனவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பிரச்சினையில் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சீர்காழி:
சீர்காழி அருகே பூம்புகார் கடற்கரையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பஞ்சாயத்தார் ஒரு தரப்பினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பாலு தரப்பினர் மாவட்ட கலெக்டர் லலிதா, உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் உதவி கலெக்டர் நாராயணன் தலைமையிலும், தாசில்தார் செந்தில்குமார், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையிலும் இருதரப்பினரையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்த பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் சுமூக தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதனை ஏற்று இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

Next Story