மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ், சுங்கவரி கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி ஆகியோர் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, மணி, வட்ட குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சிவா, ஜக்ரியா, தங்கதுரை, வேலு, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சி்ன்னசேலம்
இதேபோல் சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக்குழு அ.பா.பெரியசாமி, மாவட்ட செயற்குழு பூவராகவன், செந்தில், வட்டக்குழு நிர்வாகிகள் பழனி, ராஜாத்தி, முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story