நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா


நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா
x
தினத்தந்தி 4 April 2022 10:30 PM IST (Updated: 4 April 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா நடந்தது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உற்சவத்தையொட்டி கடந்த 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா நேற்று நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நல்லநாயகி அம்மன் மற்றும் பொறையான் சாமி சிறப்பு அலங்காரத்தில் நாக பல்லக்கில் எழுந்தருளினர். 
    அதனைத்ெதாடர்ந்து கிராம மக்கள் பல்லக்கை தோள்களில் தூக்கி சென்றனர். மணக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அம்மன் வீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Next Story