மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 4 April 2022 10:32 PM IST (Updated: 4 April 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உளுந்தூர்பேட்டை, 

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியம், அவர்களது கல்விக்கு அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள் செல்வம், ஆசிரியர் பயிற்றுனர்கள் காசிலிங்கம், ரேஷ்மா சாந்தகுமாரி, அரசு, ரம்யா, சரிதா, சுரேஷ் ,ஆறுமுகம், சிறப்பு பயிற்றுனர்கள் கோமதி, ராஜலட்சுமி ,சரண்யா, புஷ்பா, மற்றும் இயன்முறை மருத்துவர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story