பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருட்டு
வானூர் அருகே பெண்ணிடம் நூதன முறையில் பணம் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் வேல்விழி (வயது 25). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் அவர் தனது ஆன்ட்ராய்டு செல்போனில் யூனோ செயலியில் தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதை பார்த்த மர்ம நபர் ஒருவர், வேல்விழியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது புதிய கிரெடிட் கார்டு தருவதாக கூறிய அந்த நபர், வேல்விழியிடம் உங்களது கிரெடிட் கார்டில் தொகை குறைவாக உள்ளதால் கார்டை வழங்க முடியவில்லை என்று கூறியதால் வேல்விழி ரூ.20 ஆயிரத்தை டெபாசிட் செய்துள்ளார். பின்னர் அந்த நபர், வேல்விழியிடம் ஓ.டி.பி. எண்ணையும் பெற்றுக்கொண்டு ரூ.20 ஆயிரத்தை ஏமாற்றி நூதனமாக அந்த பணத்தை திருடிவிட்டார்.
இதுகுறித்து வேல்விழி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story