வேலூரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


வேலூரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2022 10:37 PM IST (Updated: 4 April 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

சத்துவாச்சாரி போலீசார் காந்திநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்தனர். அவர்களை போலீசார் மறித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 

அதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் காந்திநகரை சேர்ந்த சூர்யா (வயது 22), அபினேஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story