6 கிளிகளுடன் 2 பேர் பிடிபட்டனர்
மண்ணுளிப்பாம்பு, 6 கிளிகளுடன் 2 பேர் பிடிபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வனவர் சடை யாண்டி தலைமையிலான வனத்துறையினர் ராமநாதபுரம் ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கி சோதனையிட்டபோது அவர்களிடம் சுமார் 3 கிலோ எடையுள்ள மண்ணுளிப்பாம்பு மற்றும் 6 நாட்டு பச்சை கிளிகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மேற்கண்டவற்றை பறிமுதல் செய்த வனத்துறை யினர் இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் ராபர்ட் சர்ஜி (வயது 35) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்து தங்கம் (25) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேற்கண்டவற்றை விற்பனை செய்யும் நோக்கத்துடன் கொண்டு சென்ற இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story