சூளகிரி பகுதியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி


சூளகிரி பகுதியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 4 April 2022 11:05 PM IST (Updated: 4 April 2022 11:05 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.

சூளகிரி:
சூளகிரி பகுதியில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
லாரி மோதியது 
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அன்னசந்திரத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (வயது 23). இவர், பாத்தகோட்டாவை சேர்ந்த ராஜ்குமார் (22), அமராவதி (20) ஆகியோருடன் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் சூளகிரியில் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பவன் கல்யாண் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜ்குமார், அமராவதி ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். 
டிரைவர் 
திருப்பத்தூர் மாவட்டம் சிங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல் (28). லாரி டிரைவர். இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை காமன்தொட்டி பக்கமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு லாரி ஜெயவேல் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது. 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெயவேல், சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னையை சேர்ந்தவர் 
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் பிரான்சிஸ் (32). நேற்று முன்தினம் இவர் காரில் கோனேரிப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சாமுவேல் பிரான்சிஸ் படுகாயம் அடைந்து இறந்தார். மேலும் காரில் சென்ற சுபாஷ் (25), ஜெயஸ்ரீ (32) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 3 விபத்துகள் குறித்தும் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story