கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 188 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆணை
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 237 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அனுமதி அட்டைகள், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.22 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கு மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
Related Tags :
Next Story