திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.2 கோடி நிலம் மீட்பு


திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.2 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 4 April 2022 11:08 PM IST (Updated: 4 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.2 கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் 2 குடிசை வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜாவுக்கு புகார்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்தப்பகுதியை நகரமைப்பு அலுவலர் அளந்து பார்த்தபோது சுமார் 4 ஆயிரம் சதுர அடி ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. நகராட்சிக்கு வரியும் செலுத்தி உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பலமுறை நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதைத்தொடர்ந்து  நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் கவுசல்யா, துப்புரவு அலுவலர் இளங்கோ, துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் சென்று பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர். இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story