திருப்பத்தூரில் நேர் வழியில் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர்வுகூட்டத்தில் டிரைவர்கள் மனு


திருப்பத்தூரில் நேர் வழியில் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர்வுகூட்டத்தில் டிரைவர்கள் மனு
x
தினத்தந்தி 4 April 2022 11:12 PM IST (Updated: 4 April 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் நேர் வழியில் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வுகூட்டத்தில் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நேர் வழியில் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வுகூட்டத்தில் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 309 பேர் பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி மனு அளித்தனர். 

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது திருப்பத்தூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அந்த மனுவில் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து திருமகள் தியேட்டர் வழியாக ஆட்டோவை இயக்குமாறு அப்போதைய கலெக்டர் கூறியதை தொடர்ந்து நாங்கள் ஆட்டோவை இயக்கி வந்தோம். 

நேர் வழியில்

தற்போது டீசல் விலை உயர்வு காரணமாக, ஆட்டோ சுற்றி வரவேண்டி உள்ள காரணத்தால் போதிய விரயம் ஏற்படுகிறது. வருமானம் இல்லை. எனவே ஆட்டோவை நேர்வழியில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார், இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story