விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்
சிவகங்கை,
காளையார் கோவிலை அடுத்துள்ள உருவாட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது25). இவர் சிவகங்கை அடுத்த முத்துப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பாண்டி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் சிவகங்கை நகர் மதுரை ரோடு பகுதியில் வரும்போது அந்த வழியில் வந்த டவுன் பஸ் பாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியை சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story