ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டையில் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று காலை 1-வது நடைமேடையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அதில் ஏறிய ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.
முன் பதிவு செய்யப்பட்ட டி-1 பெட்டி கழிவறை அருகில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பைகளில் மொத்தம் 25 கிலோ எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story