ஆலங்காயம் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர டெங்கு தடுப்பு பணி


ஆலங்காயம் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர டெங்கு தடுப்பு பணி
x
தினத்தந்தி 4 April 2022 11:30 PM IST (Updated: 4 April 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்துக்கு உட்பட்ட கொல்லகுப்பம் ஊராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளான காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழுவை அழித்தல், குளோரினேசன் கண்காணித்தல் மற்றும் நலக் கல்வி அளிக்கும் பணிகள் நடந்தது.
இந்தப் பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச.பசுபதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story