மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 250 ஆக குறைந்தது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 4 April 2022 11:48 PM IST (Updated: 4 April 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 250 ஆக குறைந்தது

மும்பை, 
மும்பையில் இன்று 5 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 18 பேருக்கு மட்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு மும்பையில் பதிவான மிக குறைந்த கொரோனா பாதிப்பாகும். 
இதன்மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 58 ஆயிரத்து 129 ஆக உயர்ந்தது. இன்று இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் 50  நோயாளிகள் சிகிச்சைக்கு பின்பு குணமாகினர். இதன்மூலம் மும்பையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 320 ஆக உள்ளது. தற்போது நகரில் வெறும் 250 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மும்பையில் தற்போது கொரோனா இரட்டிப்பாகும் நாட்கள் 17 ஆயிரத்து 955 ஆக உயர்ந்துள்ளது. 
மாநிலம் முழுவதும் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம் 107 நோயாளிகள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இறப்பு ஏதும் பதிவாகவில்லை. 
இதன்மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உயர்ந்தது. இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 789 ஆக உள்ளது. குணமானவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 25 ஆயிரத்து 791 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலத்தில் 866 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Next Story