பால் வாகனத்தில் ஆபத்தான பயணம்
ஓச்சேரி பகுதியில் பஸ் வசதி இல்லாததால் பால் வாகனத்தில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த ஆயர்பாடி உயர்நிலைப்பள்ளியில், தட்சம்பட்டரை, உத்தரம்பட்டு, கரிவேடு, ஓச்சேரி, தர்மநீதி, ஆயர்பாடி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்கள் காலையில் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்கும் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் 5 கிலோ மீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்வதும், வழியில் செல்லும் வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்வதும் வழக்கமாக உள்ளது.
நேற்று 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது அந்த வழியாக வந்த பால் ஏற்றிச்சென்ற வாகனத்தில் லிப்ட் கேட்டு வாகனத்தின் பின்பகுதியில் தொங்கிய நிலையில் ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் தேவையறிந்து குறித்த நேரத்தில் அனைத்து வழித்தடங்களிளும் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story