புதிய டாஸ்மாக் கடை திறக்க பா.ஜனதா எதிர்ப்பு

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பா.ஜனதா திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியினர் மற்றும் திருச்சி தாராநல்லூர் கல் மந்தை உப்பிலியத்தெரு, பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு பகுதி மக்கள் கலெக்டர்அலுவலகத்திற்கு திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய டாஸ்மாக் கடை
திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, செக்கடி பஜார் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதி குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியாகும். அதோடு மதுபானக்கடை திறக்க உள்ள பகுதிக்கு அருகிலேயே பாலசுந்தர விநாயகர் கோவில், மற்றொரு விநாயகர் கோவில், கொத்தாளத்து முனீஸ்வரர் கோவில் ஆகிய3கோவில்கள்அமைந்துள்ளன.
இப்பகுதிக்கு அருகே குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 300 வீடுகளில் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மதுபானக்கடை திறந்தால், தொழிலாளர்களும், பள்ளி மாணவர்களும் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படும். எனவே, இந்தபகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சா, போதை ஊசி விற்பனை
பா.ஜனதா கட்சி கொடுத்துள்ள மற்றொரு மனுவில், திருச்சி மாநகர பகுதியில் கஞ்சா,போதைமாத்திரைகள், போதை ஊசிகள், ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. காந்தி மார்க்கெட், பாலக்கரை, சத்திரம் பஸ் நிலையம், ராம்ஜி நகர், மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் அதிகமாக விற்பனை ஆகிறது. எனவே, சமுதாய சீர்கேடு ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
503 மனுக்கள்
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 503 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story