பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மாட்டு வண்டியில் வந்து பங்கேற்ற எம்.எல்.ஏ.
ஈரோட்டில் பெட்ரோல்- டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றார்.
ஈரோட்டில் பெட்ரோல்- டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மாட்டு வண்டியில் வந்து பங்கேற்றார்.
விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல்- டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜூபைர் அகமது, முகமது தவுபிக், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து கலந்துகொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் ஆட்சியில் ரூ.400 ஆக இருந்த கியாஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.1,000 ஆக உயர்ந்து உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் தினம், தினம் உயர்வதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்கிறது. சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு 17 முறை கியாஸ் சிலிண்டர் விலை அதிக அளவு உயர்த்தப்பட்டு உள்ளது,’ என்றார்.
விறகு அடுப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு வைத்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், விலை ஏற்றத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்சியினர் கைகளில் ஏந்திய படியும், ராகுல்காந்தியின் உருவம் பதித்த முகமூடிகளை அணிந்தபடியும் பங்கேற்றனர். இதில் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், சிறுபான்மைபிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ், துணைத்தலைவர் கே.என்.பாஷா, நிர்வாகிகள் முகமது அர்சத், சி.எம்.ராஜேந்திரன், குப்பண்ணா சந்துரு, சந்தான பாரதி, செந்தில்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல்- டீசல் உயர்வை கண்டித்து ஈரோடு சூளையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணிக்கம்பாளையம் கிளை செலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நகர செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் நிர்வாகிகள் கனகராஜ், ரங்கநாதன் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம் உள்பட 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story