தியாகிகள் நினைவிடத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் மரியாதை
பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவிடத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் மரியாதை
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் 1920-ம் ஆண்டு கைரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயருடன் போராடிய போது சுட்டுக் கொல்லப்பட்ட மாயக்காள் என்ற பெண் உள்பட 16 பேரின் 102-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தியாகிகளின் நினைவிடத்தில் மதுரை கலெக்டர் அனிஷ் சேகர் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைதொடர்ந்து பெருங்காமநல்லூரில் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மணிமண்டப பணிகளை கலெக்டரும், மதுரை எம்.பி.யும் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story