மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை ரெயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த விலை உயர்வை மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள், கியாஸ் சிலிண்டருக்கு மாலை போடப்பட்டு, தப்பு அடித்தனர். இதில் மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, சரவணன், வசந்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, நிர்வாகி நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story