கம்பி வேலியில் சிக்கி பரிதவித்த சிறுத்தை மீட்பு
கம்பி வேலியில் சிக்கி பரிதவித்த சிறுத்தை மீட்கப்பட்டது.
மைசூரு:
மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா பெல்லவு கிராமத்தில் அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜி சோலார் பவர் பிளான்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இரை தேடி சிறுத்தை ஒன்று இந்த சோலார் உற்பத்தி நிலையத்திற்கு நுழைய முயன்றது. அப்போது கம்பி வேலியில் சிறுத்தையின் உடல் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுத்தை கம்பி வேலி பிடியில் இருந்து தப்பிக்க பரிதவித்தபடி கிடந்தது.
சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த காவலாளி அங்கு சென்று பார்த்த போது சிறுத்தை கம்பி வேலியில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை கம்பி வேலியில் இருந்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை வனத்துறையினர் விட்டனர்.
Related Tags :
Next Story