லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x
தினத்தந்தி 5 April 2022 4:10 AM IST (Updated: 5 April 2022 4:10 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி:
சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் பஸ் நிலையம், குமாரபுரம், கருப்பசாமி கோவில் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலரதவீதியில் சித்தி விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிவராமலிங்காபுரம் ஓடை‌ தெருவைச் சேர்ந்த குருவு (வயது 74) என்பதும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 47 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Next Story