மதுபான விடுதியில் நடிகையின் செல்போன் திருட்டு- மர்மநபருக்கு வலைவீச்சு


படம்
x
படம்
தினத்தந்தி 5 April 2022 5:24 PM IST (Updated: 5 April 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

மதுபான விடுதியில் நடிகையின் செல்போனை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 
மர்தானி-2 இந்தி படத்தில் நடித்து இருப்பவர் கரிமா ஜெயின் (வயது28). இவர் பல டி.வி. தொடர்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை உள்நாட்டு விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டல் மதுபான விடுதிக்கு (பப்) நண்பர்களுடன் பார்டிக்கு சென்று இருந்தார்.
இந்தநிலையில் அதிகாலை 3.15 மணியளவில் பார்டி முடிந்து வெளியே வந்த போது, நடிகை அவரது செல்போனை தேடிப்பார்த்தார். ஆனால் அதை காணவில்லை. தோழியின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்த்த போது, நடிகையின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன் மாயமானது குறித்து நடிகை மதுபானவிடுதி மேலாளர், ஊழியர்களிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் செல்போன் குறித்து தங்களுக்கு தெரியாது என கூறிவிட்டனர். 
இதையடுத்து நடிகை செல்போன் திருட்டு குறித்து ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபான விடுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடிகையின் செல்போனை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
------------


Next Story