ஆறுமுகநேரியில் கிராம சீரமைப்பு பணியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள்
ஆறுமுகநேரியில் கிராம சீரமைப்பு பணியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் 43, 44 அணிகளை சேர்ந்த மாணவர்கள் ஆறுமுகநேரி- முத்துக்கிருஷ்ணாபுரம், சீனந்தோப்பு, ராஜமணியபுரம் ஆகிய கிராமங்களை தத்தெடுத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 100 மாணவர்களும், 2 பேராசிரியர்களும் ஒரு வாரம் தங்கியிருந்து கிராம சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்ட இப்பணியின் தொடக்க விழா ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் குத்துவிளக்கேற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார், லைட் முதியோர் இல்ல நிறுவனர் பிரேம்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சிவகுமார், ஊர்க்கமிட்டி பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக திட்ட அலுவலர் கதிரேசன் வரவேற்றார். அபுல்கலாம் ஆசாத் நன்றி கூறினார். இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், ஆதவா பவுண்டேசன் நிறுவனர் குமரேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவில் பேரூராட்சி துணை தலைவர் கல்யாண சுந்தரம் பாராட்டி பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் நாராயணராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story