போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில், போலீசார் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட போலீசார் பயன்படுத்தி வரும் 20 கனரக வாகனங்கள், 58 கார்கள், 61 மோட்டார் சைக்கிள்கள் ஆக மொத்தம் 139 வாகனங்களின் பராமரிப்பு மாதம் தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மோட்டார் சைக்கிளை சிறந்த முறையில் பராமரித்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் ஏட்டு சுப்பிரமணியனை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது, குறைபாடு உள்ள வாகனங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சக்கர வாகனம் ஓட்டும் போலீசார் கட்டாயம் சீட் பெல்டு் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படாத வகையில் வாகனம் ஓட்ட வேண்டும்’ என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், அந்தோணி ராபின்ஸ்டன் கென்னடி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story