குப்பை கிடங்கில் தீ
குப்பை கிடங்கில் தீ
கூடலூர்
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இதன் அருகே தபால் நிலையத்துக்கு சொந்தமான வளாகம் இருக்கிறது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் மலைபோல் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ பரவியது. பிளாஸ்டிக் கழிவுகளும் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது.
இதனால் தீயணைப்பு துறையினர், பி.எஸ்.என்.எல். அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் சரியாக சுவாசிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பொது இடங்களில் குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தபால் நிலைய வளாகம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story