தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 April 2022 8:27 PM IST (Updated: 5 April 2022 8:27 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

சாக்கடை கால்வாய் வசதி 
சாணார்பட்டி ஒன்றியம் கோணப்பட்டி தெற்குதெருவில் ரேஷன்கடை பின்பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மண், குப்பைகள் சேர்ந்து அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்துதர வேண்டும். -சின்னத்தம்பி, கோணப்பட்டி.

பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு
நத்தம் தாலுகா கோபால்பட்டியில் இருக்கும் பயணிகள் நிழற்குடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் பயணிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -சீனிவாசன், கோபால்பட்டி.

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு 
பழனி வடக்கு கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். -நிஷார், பழனி.

கழிவுகள் தீவைத்து எரிப்பு 
தேனி ஊஞ்சம்பட்டி மணிநகர் அருகில் பஞ்சு கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் சாயக்கழிவுகள் மொத்தமாக கொட்டி தீவைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியாகும் கரும்புகை குடியிருப்பு பகுதிகளுக்கு பரவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுகள் தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். -கதிரவன், தேனி.




Next Story