பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவர்
கோவில்பட்டி ஜோதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 43). அரசு பஸ் டிரைவர். இவரது மகன் சரவணகுமார் (15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி சென்று திரும்பிய சரவணகுமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரி முற்றுகை
இந்நிலையில் நேற்று மாணவரின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், சரவணகுமார் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவனின் உடலை வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story