இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசர சட்டம் அமல்படுத்தியது தெரியாதா?-குமாரசாமிக்கு, மந்திரி சுதாகர் கேள்வி


இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசர சட்டம் அமல்படுத்தியது தெரியாதா?-குமாரசாமிக்கு, மந்திரி சுதாகர் கேள்வி
x
தினத்தந்தி 5 April 2022 9:26 PM IST (Updated: 5 April 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசர சட்டம் அமல்படுத்தியது தெரியாதா? என்று குமாரசாமிக்கு, மந்திரி சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார்

சிக்பள்ளாப்பூர்: இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசர சட்டம் அமல்படுத்தியது தெரியாதா? என்று குமாரசாமிக்கு, மந்திரி சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஆலோசனை கூட்டம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் தலித் சங்கங்கள் சார்பில் வருகிற 14-ந் தேதி அம்பேத்கர், பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் சுகாதாரத்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சுதாகர் தலைமையில் நடந்தது. இதைதொடர்ந்து மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
பா.ஜனதா பலம் பெறும்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் அம்பேத்கர், பாபு ஜெகஜீவன் ராம் ஆகியோரின் பிறந்த நாள் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. பா.ஜனதா கட்சியின் அரசியல் சாணக்கியன் என்று உள்துறை மந்திரி அமித்ஷா அழைக்கப்படுகிறார்.

அவரின் தனிப்பட்ட முயற்சியாலும், ராஜ தந்திரத்தாலும் உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி கிடைத்தது. அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்து சென்றது கட்சியை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்தால் மாநில பா.ஜனதா மேலும் பலம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
காங்கிரஸ் ஆட்சியில் அவசர சட்டம்
 கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மதக்கலவரத்தை தூண்டுவதாகவும், இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை ஏற்படும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். நாட்டின் சரித்திரத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் குமாரசாமி பேசுகிறார்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி  ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இந்தியாவில் அவசர சட்டத்தை அமல்படுத்தவில்லையா. அந்த நிலை தற்போது கர்நாடகம் அல்லது இந்தியாவில் இல்லை என்பதை குமாரசாமி புரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் நிதி நிலை மோசமானதால் அவசர சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலை இந்தியாவுக்கு வராது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story